தமிழ் - பேசுவதற்கு எளிமையாகவும், எழுதுவதற்கு சற்றே சிரமமான மொழி. இன்னைக்கு எல்லாம் எங்கேங்க தமிழ் பேசுறாங்க!? எல்லாம் தமில் தான் பேசுறாங்க. ஆனா எப்படி பேசினாலும் பேசறது அட்லீஸ்ட் புரிஞ்சிக்க முடியுது. எழுதுறது அப்படி இல்லையே ?
முன்ன எல்லாம் நாம என்ன பண்ணோம். கடுதாசி எழுதி போட்டோம். வீட்டுல இருந்து ஊருக்கு போறப்போ, "போய்ட்டு கடுதாசி போடு" அப்படின்னு சொல்லுவாங்கோ. (நாம போட மாட்டோம்- ங்கறது வேற விஷயம்). இப்ப அப்படியா இருக்கு. பொறந்த கொழந்தை கூட மொபைல் வச்சு தான் விளையாடுது. மொபைல்- லயும் கம்ப்யூட்டர்-லயும் எப்படி தமிழ் மட்டுமே தெரிஞ்சவங்க எழுதுவாங்க. இங்கிலீஷ் மாதிரி தமிழ்-ல அவ்வளவு ஈஸியா டைப் பண்ண முடியாது (ஏன்னா இங்கிலிஷ ல 26 எழுத்து, தமிழ் - ல 247 எழுத்து-ன்னு சொல்றீங்கள்ள!!! வெரி குட்)
இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னு பார்த்தீங்களா?? எல்லாம் பட்ட கஷ்டம் தாங்க!. இந்த போஸ்ட்-அ எழுதவே எனக்கு அரை மணி நேரம் ஆனதுங்க. Be Careful . (நான் என்னை சொன்னேன் அவ்........)

0 comments:
Post a Comment